நடிப்பை விட்டுவிட்டு இயக்கத்தைத் தேர்ந்தெடுத்தது ஏன்: மனம் திறந்த தளபதியின் மகன் ஜேசன் சஞ்சய்!

நடிப்பை விட்டுவிட்டு இயக்கத்தைத் தேர்ந்தெடுத்தது ஏன்: மனம் திறந்த தளபதியின் மகன் ஜேசன் சஞ்சய்!

தளபதி விஜய்யின் மகனாக எளிதாக கதாநாயகனாக நடித்திருக்க முடியும் என்ற நிலையில், இயக்கத்தைத் தேர்வு செய்தது ஏன் என்ற கேள்விக்கு ஜேசன் சஞ்சய் சுவாரசியமான விளக்கமளித்துள்ளார். கல்லூரிப் படிப்பின் போதே திரைக்கதை எழுதுவதில் தனக்கு ஆர்வம் இருந்ததாகவும், சிறு வயதிலிருந்தே கதை சொல்வது தனக்கு மிகவும் பிடித்த கலை என்றும் அவர் பகிர்ந்துள்ளார். நண்பர்களிடம் பேசும்போது கூட நடந்த சம்பவங்களை மசாலா சேர்த்து சுவாரசியமாக விவரிப்பேன் என்றும், அப்படித் தொடங்கிய கதை சொல்லும் ஆர்வமே தன்னை ஒரு இயக்குநராக மாற்றியது என்றும் கூறியுள்ளார். கதை உருவாக்கத்தின் மீதான இந்த காதலே சிக்மா படத்தின் மூலமாக அவரை இயக்குநர் நாற்காலியில் அமர்த்தியுள்ளது. சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் நாளை திரைக்கு வரவுள்ள நிலையில், இவரது கதை சொல்லும் விதம் திரையில் எப்படி வெளிப்பட்டுள்ளது என்பதைக் காண ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

· @_movietamil

பழைய செய்திகள்