சூர்யா பட வாய்ப்பு கிடைத்தது எப்படி? உண்மை பகிர்ந்த எழுத்தாளர் திராவிட் செல்வம்!
பரிதாபங்கள் குழுவின் மூலம் தனது திரைப்பயணத்தைத் தொடங்கிய எழுத்தாளர் திராவிட் செல்வம், கார்த்தி மற்றும் சூர்யா ஆகியோருடன் இணைந்த அனுபவம் குறித்து சமீபத்திய பேட்டியில் மனம் திறந்து பேசியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. பரிதாபங்கள் கோபி மற்றும் சுதாகர் ஆகியோருடன் பணியாற்றியபோது, நடிகர் கார்த்தி நடித்த விளம்பரப் படத்திற்கு எழுதும் வாய்ப்பு திராவிட்டுக்குக் கிடைத்தது. திராவிட்டின் எழுத்துப் பணியைப் பாராட்டிய கார்த்தி, தொடர்ந்து தனது அடுத்த விளம்பரங்களுக்கும் அவரையே பணியாற்ற வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து, இயக்குநர் ஜித்து மாதவன் நடிகர் சூர்யாவை வைத்து இயக்கும் புதிய படத்திற்குத் தமிழ் எழுத்தாளரைத் தேடியபோது, கார்த்திதான் தனது அண்ணன் சூர்யாவிடம் திராவிட் பெயரைப் பரிந்துரைத்துள்ளார். இதன் மூலமாகவே சூர்யா, ஜித்து மாதவன் இணையும் மிகப்பெரிய திரைப்படத்தில் எழுத்தாளராக இணையும் வாய்ப்பு தனக்குக் கிடைத்ததாக திராவிட் செல்வம் நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்துள்ளார். திறமையான இளம் எழுத்தாளர்களை அடையாளம் கண்டு அடுத்த தளத்திற்கு அழைத்துச் செல்லும் கார்த்தியின் மனிதநேயத்தை ரசிகர்கள் மனதாரப் பாராட்டி வருகின்றனர்.
· @_movietamil