யாத்திசை இயக்குநரின் அடுத்த படைப்பு: டெத் ரயில்வே மிரட்டல் போஸ்டர் வெளியீடு!
வரலாற்றுப் பின்னணியில் 'யாத்திசை' திரைப்படத்தை இயக்கி பாராட்டுக்களைப் பெற்ற இயக்குநர் தரணி ராசேந்திரன், அடுத்ததாக இரண்டாம் உலகப் போரின் பின்னணியில் உருவாகும் 'டெத் ரயில்வே' (Death Railway) திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் சுவாரசியமான போஸ்டர் தற்போது வெளியாகி இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது. வரலாற்றில் மறைக்கப்பட்ட கொடூரமான ரயில் பாதை அமைக்கும் பணிகளையும், அதில் சிக்கிய மக்களின் தியாகங்களையும் மையமாகக் கொண்டு இப்படம் உருவாகிறது. கமலகண்ணன் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு சசிகுமார், சமுத்திரக்கனி, அசோக் செல்வன், பவானி ஸ்ரீ உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் இதன் முன்னோட்ட வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளன. உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு அழுத்தமான வரலாற்றுப் படமாக உருவாகி வரும் டெத் ரயில்வே, சினிமா ரசிகர்களுக்கு முற்றிலும் புதிய திரை அனுபவத்தைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
· Actor Kayal Devaraj