ராமாயணா படத்தில் 33 கிலோ ஆடையுடன் நடித்த யாஷ்: ஆடை வடிவமைப்பாளர் வெளியிட்ட சுவாரசிய தகவல்
பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள 'ராமாயணா' திரைப்படத்தில் ராவணனாக நடிக்கும் கேஜிஎஃப் நாயகன் யாஷின் தோற்றம் குறித்து ஆடை வடிவமைப்பாளர் சானியா சர்தாரியா ஆச்சரியமூட்டும் தகவல்களைப் பகிர்ந்துள்ளார். யாஷின் பிரம்மாண்ட ஆடை சுமார் 33 கிலோ எடை கொண்டது என அவர் கூறியுள்ளார். ராவணனின் கம்பீரத்தையும் அரக்கர் தலைவனின் அரச மரியாதையையும் வெளிப்படுத்தும் வகையில் மிக நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் இந்த ஆடை உருவாக்கப்பட்டது. இவ்வளவு கடினமான, அதிக எடையுள்ள கவச ஆடையை அணிந்து கொண்டு யாஷ் அசால்ட்டாக காட்சிகளில் நடித்தது படக்குழுவினரையே வியக்க வைத்ததாக வடிவமைப்பாளர் விவரித்துள்ளார். ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ் ஆகியோர் இணைந்து நடித்துள்ள ராமாயணா திரைப்படம் இந்திய திரையுலகின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய திரைப்படமாகத் திகழ்கிறது.
· @xpresscinema