ராமாயணம் படத்தில் இராவணனாக யாஷ்: திரையில் அதிர வைக்கும் நடிப்பு

ராமாயணம் படத்தில் இராவணனாக யாஷ்: திரையில் அதிர வைக்கும் நடிப்பு

பிரம்மாண்ட படைப்பாக உருவாகி வரும் 'ராமாயணம்' திரைப்படத்தில் இராவணன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் யாஷின் அசாத்திய ஸ்கிரீன் பிரசன்ஸ் குறித்து சினிமா வட்டாரங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. திரையுலக பிரமுகர் பிரதீஷ் சேகர் யாஷின் ஆக்ரோஷமான நடிப்பை தனது எக்ஸ் பக்கத்தில் வியந்து பாராட்டியுள்ளார். இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகும் இந்த இதிகாசப் படத்தில் யாஷ் ஏற்றிருக்கும் இராவணன் கதாபாத்திரம் மிகக் கம்பீரமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. யாஷின் அனல் பறக்கும் பார்வை, ஆளுமைமிக்க உடல்மொழி மற்றும் ஆக்ரோஷம் ஆகியவை இராவணன் கதாபாத்திரத்திற்கு அபாரமான எனர்ஜியை கொடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு காட்சியிலும் யாஷ் திரையை தன் வசப்படுத்தி ஆதிக்கம் செலுத்தியுள்ளார். கே.ஜி.எஃப் திரைப்படங்களின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு யாஷ் திரையில் தோன்றும் படம் என்பதால், பான் இந்திய அளவில் அவரது இராவணன் அவதாரத்தைக் காண ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

· Propratheesh

பழைய செய்திகள்