ராமாயணா திரைப்படத்தின் உலகளாவிய முதல் பிரீமியர் காட்சி: நடிகர் யாஷின் மாஸ் என்ட்ரி வீடியோ வைரல்
நமித் மல்ஹோத்ரா தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள 'ராமாயணா' திரைப்படத்தின் உலகளாவிய முதல் பிரீமியர் காட்சி திரையிடலில், கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திரம் யாஷ் கலந்து கொண்டு ரசிகர்களை ஆரவாரத்தில் ஆழ்த்தியுள்ளார். இவ்விழாவில் அவர் கம்பீரமாக அரங்கிற்குள் நுழைந்த காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இத்திரைப்படத்தில் ராவணன் கதாபாத்திரத்தில் மிக அழுத்தமாக நடித்துள்ளதுடன், இணை தயாரிப்பாளராகவும் யாஷ் பங்காற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரீமியர் அரங்கிற்குள் அவர் நுழைந்தபோது ரசிகர்கள் அனைவரும் எழுந்து நின்று கைதட்டி உற்சாகக் குரல் எழுப்பி வரவேற்ற காட்சியை மூவி தமிழ் எக்ஸ் பக்கம் வீடியோவாகப் பகிர்ந்துள்ளது. திரையுலகப் பிரபலங்கள் பலரும் இந்த பிரத்யேக காட்சியைப் பார்வையிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். பிரம்மாண்டமான அரங்க அமைப்பு மற்றும் நவீன காட்சி அமைப்புகளுடன் உருவாகியுள்ள ராமாயணா திரைப்படம், திரையரங்குகளில் வெளியாகும் முன் உலகளாவிய பிரீமியர் திரையிடல் மூலம் சினிமா பிரியர்களின் கவனத்தை முழுமையாக ஈர்த்துள்ளது.
· @_movietamil