பஹ்ரைன் தணிக்கையை நிறைவு செய்தது 'கே.ஜி.எஃப் 2': பிஜி 15 சான்றிதழுடன் ஏப்ரல் 14-ல் ரிலீஸ்!

பஹ்ரைன் தணிக்கையை நிறைவு செய்தது 'கே.ஜி.எஃப் 2': பிஜி 15 சான்றிதழுடன் ஏப்ரல் 14-ல் ரிலீஸ்!

ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கியுள்ள உலகப் பிரசித்தி பெற்ற ஆக்‌ஷன் படமான 'கே.ஜி.எஃப் சாப்டர் 2', பஹ்ரைன் நாட்டின் தணிக்கைக் குழுவிடம் 'பிஜி 15' சான்றிதழைப் பெற்றுள்ளது. வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி உலகம் முழுவதும் பான்-இந்தியா திரைப்படமாக வெளியாகும் இப்படத்தின் வெளிநாட்டு வெளியீட்டு விவரங்களை விநியோக நிறுவனமான ஏபி இன்டர்நேஷனல் அறிவித்துள்ளது. ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் பாலிவுட் நட்சத்திரங்கள் சஞ்சய் தத் அதீராவாகவும், ரவீனா டாண்டன் ரமிகா சென்னாகவும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ரவி பஸ்ரூரின் காதை அதிர வைக்கும் பின்னணி இசை மற்றும் பிரசாந்த் நீலின் மிரட்டலான மேக்கிங் ஆகியவை முதல் பாகத்தை விட பல மடங்கு விறுவிறுப்பை இரண்டாம் பாகத்திற்கு அளித்துள்ளன. பஹ்ரைனில் உள்ள அனைத்து முன்னணி தியேட்டர்களிலும் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் படத்தை வெளியிட விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உலகமெங்கும் முன்பதிவு சாதனை படைத்து வரும் ராக்கி பாயின் இந்த அதிரடிப் புயலைக் காண மத்திய கிழக்கு நாடுகளிலும் ரசிகர்கள் பேரார்வத்துடன் காத்திருக்கின்றனர்.

· Apifilms

பழைய செய்திகள்