நம் கதைகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்வதில் பெருமிதம்: லாஸ் ஏஞ்சல்ஸ் விழாவில் ராகிங் ஸ்டார் யாஷ் நெகிழ்ச்சி!

நம் கதைகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்வதில் பெருமிதம்: லாஸ் ஏஞ்சல்ஸ் விழாவில் ராகிங் ஸ்டார் யாஷ் நெகிழ்ச்சி!

பிரம்மாண்ட காவியமான ராமாயணம் திரைப்படத்தின் சர்வதேச விளம்பர நிகழ்வு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த பிரீமியர் நிகழ்வில் கலந்துகொண்ட ராகிங் ஸ்டார் யாஷ், பல ஆயிரம் ஆண்டுகளாக தலைமுறை தலைமுறையாக கடத்தப்பட்டு வந்த நமது இதிகாசக் கதைகளை இந்திய சினிமாவின் மூலம் உலக அரங்கிற்கு கொண்டு சேர்ப்பதில் பெருமிதம் கொள்கிறேன் என்று உணர்ச்சிபூர்வமாக பேசியுள்ளார். கேஜிஎஃப் திரைப்படங்களின் மூலம் உலகம் முழுவதும் புகழ்பெற்ற யாஷ், இப்படத்தில் ராவணன் என்ற கம்பீரமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும் நடித்துள்ளனர். ஹாலிவுட் சினிமா மேதைகளும் கலந்துகொண்ட இந்த லாஸ் ஏஞ்சல்ஸ் விழாவில் யாஷின் பேச்சு உலக சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்திய சினிமாவின் கற்பனை வளத்தையும் கலாச்சாரப் பெருமையையும் சர்வதேச பார்வையாளர்களிடம் சேர்க்க படக்குழு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இப்படம் வரும் நவம்பர் 5 ஆம் தேதி உலகெங்கும் பல மொழிகளில் வெளியாகிறது. சர்வதேச தரத்தில் உருவாகியுள்ள ராமாயணத்தை பெரிய திரையில் காண உலகம் முழுவதிலும் உள்ள சினிமா ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

· Idiamondbabu

பழைய செய்திகள்