தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் வேணு யெல்தண்டியின் எல்லம்மா: 2027 மார்ச் 5 அன்று 5 மொழிகளில் பிரம்மாண்ட ரிலீஸ்!

தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் வேணு யெல்தண்டியின் எல்லம்மா: 2027 மார்ச் 5 அன்று 5 மொழிகளில் பிரம்மாண்ட ரிலீஸ்!

மண்ணின் மணம் கமழும் கிராமத்துப் பின்னணியில் மிரட்டலான கதையம்சத்தோடு தயாராகி வரும் எல்லம்மா திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 2027 ஆம் ஆண்டு மார்ச் 5 ஆம் தேதி இப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. பலகம் திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று தேசிய அளவில் பாராட்டுகளைக் குவித்த இயக்குநர் வேணு யெல்தண்டி இப்படத்தை இயக்குகிறார். ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் படத்திற்கு ஆக்ரோஷமான மற்றும் உணர்ச்சிகரமான இசையை வழங்கவுள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் என ஐந்து மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக இப்படம் தயாராகிறது. மக்களின் நம்பிக்கை மற்றும் கிராமிய கலாச்சாரத்தை மையமாகக் கொண்ட இந்த படைப்பு குறித்த போஸ்டர்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் சினிமா ரசிகர்களிடையே பெருமளவில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

· Kollywood Ent

பழைய செய்திகள்