யு/ஏ சான்றிதழுடன் அக்டோபர் 1 அன்று வெளியாகும் ஏழு கடல் ஏழு மலை

யு/ஏ சான்றிதழுடன் அக்டோபர் 1 அன்று வெளியாகும் ஏழு கடல் ஏழு மலை

இயக்குனர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி, சூரி மற்றும் அஞ்சலி ஆகியோர் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'ஏழு கடல் ஏழு மலை' திரைப்படம் தணிக்கை செய்யப்பட்டு 'யு/ஏ' சான்றிதழ் பெற்றுள்ளது. இந்த அதிகாரப்பூர்வ செய்தியை பிஆர்ஓ நிகில் முருகன் எக்ஸ் தளத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். யுவன் சங்கர் ராஜாவின் மெய்சிலிர்க்க வைக்கும் இசையில், சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இத்திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் ஏற்கனவே திரையிடப்பட்டு பலத்த கைத்தட்டல்களைப் பெற்றுள்ளது. நிவின் பாலி மற்றும் சூரியின் அசத்தலான நடிப்பு கோலிவுட் வட்டாரத்தில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது. அனைத்து தரப்பு ரசிகர்களும் கண்டு ரசிக்கும் வகையில் தயாராகியுள்ள ஏழு கடல் ஏழு மலை திரைப்படம், வரும் அக்டோபர் 1 அன்று திரையரங்குகளில் உலகளவில் பிரம்மாண்டமாக வெளியாகிறது. தரமான தமிழ் சினிமாவை கொண்டாடும் ரசிகர்களுக்கு இப்படம் ஒரு மறக்கமுடியாத அனுபவமாக அமையும்.

· Nikil Murukan

பழைய செய்திகள்