இயக்குநர் ராமின் 'ஏழு கடல் ஏழு மலை': சென்சாரில் U/A சான்றிதழ், அக்டோபர் 1 திரைக்கு வருகிறது!

இயக்குநர் ராமின் 'ஏழு கடல் ஏழு மலை': சென்சாரில் U/A சான்றிதழ், அக்டோபர் 1 திரைக்கு வருகிறது!

இயக்குநர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி, சூரி மற்றும் அஞ்சலி ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ள 'ஏழு கடல் ஏழு மலை' திரைப்படத்திற்கு தணிக்கைக் குழு 'U/A' சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்த அதிகாரப்பூர்வ தகவலை கோலிவுட் என்டர்டெயின்மென்ட் தளம் தற்போது உறுதிப்படுத்தியுள்ளது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா ஆன்மாவைத் தொடும் இசையமைத்துள்ளார். சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு உலக சினிமா ரசிகர்களின் மிகப்பெரிய பாராட்டுகளையும் சர்வதேச விருதுகளையும் குவித்த இப்படம், காதலும் மனித வாழ்க்கையின் ஆழமான உணர்வுகளையும் தத்துவார்த்தப் பார்வையில் பேசுகிறது. நிவின் பாலி, அஞ்சலி மற்றும் சூரியின் அசாதாரண நடிப்பு இப்படத்தில் தனித்து நிற்கும் எனத் திரைப்பட விழாக்களில் படத்தை முன்கூட்டியே பார்த்த முன்னணி விமர்சகர்கள் பாராட்டியுள்ளனர். அனைத்து தணிக்கை நடைமுறைகளும் இனிதே நிறைவடைந்துள்ள நிலையில், அக்டோபர் 1 முதல் உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் இப்படம் மிக பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.

· Kollywood Ent

பழைய செய்திகள்