'ஏழு கடல் ஏழு மலை' படத்திற்கு குட்டீஸ்களின் க்யூட் ரெஸ்பான்ஸ்: இயக்குநர் ராமின் படைப்புக்குக் குவியும் பாராட்டு!
இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவான 'ஏழு கடல் ஏழு மலை' திரைப்படத்திற்குத் திரையரங்குகளில் குடும்பங்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் கிடைத்துள்ள அழகான வரவேற்பை நடிகர் காயல் தேவராஜ் எக்ஸ் தளத்தில் வீடியோவாகப் பகிர்ந்துள்ளார். திரையரங்குகளில் படம் பார்த்துவிட்டு வெளியே வந்த சிறு குழந்தைகள் தங்களது மழலை மொழியில் படத்தை பாராட்டியிருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிவின் பாலி, சூரி, அஞ்சலி ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா ஆன்மார்த்தமான இசையை வழங்கியுள்ளார். சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படம், மனித உறவுகளின் உன்னதமான அன்பைப் பேசும் அற்புதக் கவிதையாக அமைந்திருப்பதால் அனைத்துத் தரப்புப் பார்வையாளர்களையும் ஈர்த்துள்ளது. சர்வதேச திரைப்பட விழாக்களில் புகழ்பெற்ற இப்படத்தை, தமிழகத் திரையரங்குகளிலும் ரசிகர்கள் மனதாரக் கொண்டாடி டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர். குழந்தைகளின் இந்த இயல்பான பாராட்டுகள் குடும்ப ரசிகர்களைத் திரையரங்கு நோக்கி மேலும் அதிக அளவில் ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
· Actor Kayal Devaraj