ஏழு கடல் ஏழு மலை படத்தின் முதல் 3 நிமிட காட்சிகள் வெளியானது

ஏழு கடல் ஏழு மலை படத்தின் முதல் 3 நிமிட காட்சிகள் வெளியானது

இயக்குனர் ராமின் தனித்துவமான சினிமா உலகத்திற்குள் ரசிகர்களை அழைத்துச் செல்லும் விதமாக, 'ஏழு கடல் ஏழு மலை' திரைப்படத்தின் முதல் 3 நிமிட காட்சிகள் யூடியூபில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. வெளியான சில மணி நேரங்களிலேயே இந்த வீடியோ துணுக்கு இணையதளங்களில் ரசிகர்களின் தீவிர கவனத்தை ஈர்த்துள்ளது. நிவின் பாலி, சூரி, அஞ்சலி ஆகியோரின் அசாதாரண நடிப்பும், யுவன் சங்கர் ராஜாவின் ஆழ்ந்த இசையும் இந்த தொடக்க காட்சிகளிலேயே படத்தின் தீவிர தன்மையை உணர வைக்கின்றன. ராமின் அழுத்தமான வசனங்களும் என்.கே.ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவும் தமிழ் சினிமா ரசிகர்களை பிரமிக்க வைத்துள்ளது. சுரேஷ் காமாட்சியின் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் வரும் அக்டோபர் 1 அன்று திரையரங்குகளில் ரிலீசாகிறது. படத்தின் முதல் மூன்று நிமிடங்களே இவ்வளவு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், திரையரங்குகளில் படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என சினிமா ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்