இயக்குனர் ராமின் ‘ஏழு கடல் ஏழு மலை’: தயாரிப்பு வீடியோ வெளியானது

இயக்குனர் ராமின் ‘ஏழு கடல் ஏழு மலை’: தயாரிப்பு வீடியோ வெளியானது

இயக்குனர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி, அஞ்சலி மற்றும் சூரி முதன்மை வேடங்களில் நடித்துள்ள திரைப்படம் ‘ஏழு கடல் ஏழு மலை’. சர்வதேச திரைப்பட விழாக்களில் பலத்த பாராட்டுக்களைப் பெற்ற இப்படத்தின் சுவாரசியமான தயாரிப்பு மேக்கிங் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அடர்ந்த காடுகள் மற்றும் கரடுமுரடான நிலப்பரப்புகளில் படக்குழுவினர் கடுமையான உழைப்பைக் கொடுத்து காட்சிகளை படமாக்கிய விதம் இந்த வீடியோவில் பிரமிக்க வைக்கிறது. திரையரங்குகளில் முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில், இத்திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்