ஏழு கடல் ஏழு மலை படத்தின் வெளிநாட்டு உரிமையை கைப்பற்றிய டிரிபிள் எம் நிறுவனம்
இயக்குநர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி நடித்துள்ள ஏழு கடல் ஏழு மலை திரைப்படத்தின் வெளிநாட்டு திரையரங்க வெளியீட்டு உரிமையை பிரபல டிரிபிள் எம் புரொடக்ஷன் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக எக்ஸ் தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிவின் பாலி, அஞ்சலி மற்றும் சூரி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்தத் திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் பல விருதுகளையும் உலக சினிமா விமர்சகர்களின் ஏகோபித்த பாராட்டுகளையும் குவித்து சினிமா பிரியர்களின் ஆவலைத் தூண்டியுள்ளது. தூய்மையான காதலும் மனித வாழ்வின் ஆழமும் கலந்த இந்த அழுத்தமான திரைப் படைப்பு வரும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், வெளிநாடுகளிலும் அதிக திரைகளில் படத்தை வெளியிட டிரிபிள் எம் நிறுவனம் தீவிரமாகத் திட்டமிட்டு களமிறங்கியுள்ளது.
· Nikil Murukan