யோகி பாபுவின் 300-வது திரைப்படம்: 'அர்ஜுனன் பேர் பத்து' நவம்பர் 27-ல் ரிலீஸ்

யோகி பாபுவின் 300-வது திரைப்படம்: 'அர்ஜுனன் பேர் பத்து' நவம்பர் 27-ல் ரிலீஸ்

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான யோகி பாபு தனது கலைப்பயணத்தில் 300-வது திரைப்படமாக நடித்துள்ள 'அர்ஜுனன் பேர் பத்து' திரைப்படம் வரும் நவம்பர் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மிகக் குறுகிய காலகட்டத்திலேயே நகைச்சுவை நடிகராகவும் முதன்மைக் கதாபாத்திர நடிகராகவும் 300 திரைப்படங்களை எட்டியுள்ள யோகி பாபுவுக்கு இது ஒரு சிறப்பான சாதனையாகும். இப்படத்தில் கதையின் நாயகனாக நகைச்சுவை, குடும்ப உணர்வுகள் மற்றும் சென்டிமென்ட் கலந்த ஒரு எதார்த்தமான கிராமத்து இளைஞனாக யோகி பாபு தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். குடும்பத்தோடு ரசித்துச் சிரிக்கும் அருமையான பொழுதுபோக்குப் படமாக உருவாகியுள்ள 'அர்ஜுனன் பேர் பத்து' நவம்பர் இறுதியில் திரைக்கு வருவது ரசிகர்களிடையே நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் முன்னோட்டம் மற்றும் இசை வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ விவரங்கள் விரைவில் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன.

· @_movietamil

பழைய செய்திகள்