யோகி பாபு நடிக்கும் சிங்காரம் பட அறிவிப்பு: சாம் சி.எஸ் இசையில் உருவாகும் புதிய படைப்பு!

யோகி பாபு நடிக்கும் சிங்காரம் பட அறிவிப்பு: சாம் சி.எஸ் இசையில் உருவாகும் புதிய படைப்பு!

நடிகர் யோகி பாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய திரைப்படமான 'சிங்காரம்' (Singgaramm) குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. உலகம் பணிந்து போகச் சொல்லும்போது, அவன் துணிச்சலைத் தேர்ந்தெடுத்து விதியை மாற்றி எழுதுகிறான் என்ற அழுத்தமான வாசகத்துடன் இந்த ஃபர்ஸ்ட் லுக் விபரங்களை நடிகர் கயல் தேவராஜ் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ராக் புரொடக்ஷன் தயாரிப்பில், இயக்குநர் கே.வி. கதிர்வேலு இயக்கும் இப்படத்தில் யோகி பாபுவுடன் இணைந்து வேல ராமமூர்த்தி, படவா கோபி, சாம்ஸ், செண்ட்ராயன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்க, விவேகா பாடல்களை எழுதுகிறார். எடிட்டிங் பணிகளை கிஷோர் கவனிக்கிறார். ஒரு சாமானிய மனிதனின் வீரம் மற்றும் போராட்டக் கதையாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் சிங்காரம் படத்தின் கூடுதல் அப்டேட்கள் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்