யோகி பாபு மற்றும் சத்யா இணையும் கோல்டன் பாக்யம்: தலைப்பு க்ளிம்ப்ஸ் வெளியானது

யோகி பாபு மற்றும் சத்யா இணையும் கோல்டன் பாக்யம்: தலைப்பு க்ளிம்ப்ஸ் வெளியானது

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நாயகன் யோகி பாபு மற்றும் தெலுங்கு சினிமாவின் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் சத்யா ஆகியோர் முதல்முறையாக இணைந்து நடிக்கும் திரைப்படத்திற்கு 'கோல்டன் பாக்யம்' என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் தமிழ் தலைப்பு க்ளிம்ப்ஸ் வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளது. இயக்குனர் பவன் பாசம்செட்டி இயக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவாகி வருகிறது. இரண்டு மொழிகளின் திறமையான நகைச்சுவை நடிகர்கள் திரையில் ஒன்றாகத் தோன்றுவது ரசிகர்களுக்கு நிச்சயம் ஒரு முழுநீள நகைச்சுவை விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. ட்ரீம் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு பவன் சி இசையமைக்கிறார். ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டியுள்ள கோல்டன் பாக்யம் படத்தின் அடுத்தகட்ட டீசர் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என தயாரிப்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்