நீண்ட நாட்களுக்குப் பின் பாடகராக யோகி பாபு: 'அன்பில் அவன்' படத்தின் 'பாட்ஷா டா' வீடியோ பாடல் ரிலீஸ்!

நீண்ட நாட்களுக்குப் பின் பாடகராக யோகி பாபு: 'அன்பில் அவன்' படத்தின் 'பாட்ஷா டா' வீடியோ பாடல் ரிலீஸ்!

திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் பாராட்டைப் பெற்று வரும் அசோக் செல்வன் மற்றும் ப்ரீத்தி முகுந்தன் நடித்த 'அன்பில் அவன்' திரைப்படத்திலிருந்து, பிரபல நகைச்சுவை நடிகர் யோகி பாபு பாடியுள்ள 'பாட்ஷா டா' என்ற வீடியோ பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகிறது. கார்த்தி கேன் இயக்கத்தில் உருவான இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். தனது நகைச்சுவை நடிப்பால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவரும் யோகி பாபு, நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் மைக் பிடித்து பாடியுள்ள பாடல் என்பதால் இப்பாடல் மீது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஆர்வம் எழுந்துள்ளது. திரையரங்குகளில் ஏற்கனவே ரசிகர்களை ஆட்டம் போட வைத்த இப்பாடல் தற்போது இணையத்திலும் வீடியோ வடிவில் வரவுள்ளது. ஐங்கரன் இன்டர்நேஷனல் மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் இடம்பெற்ற இந்த கலகலப்பான வீடியோ பாடல், சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

· @kollywoodscope

பழைய செய்திகள்