யோகி பாபுவின் புதிய திரைப்படம் 'சிங்காரம்': ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!
தமிழ் சினிமாவில் கதாநாயகனாகவும் நகைச்சுவை நடிகராகவும் தொடர்ந்து கலக்கி வரும் யோகி பாபு நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படமான 'சிங்காரம்' (Singgaramm) படத்தின் அறிவிப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் கயல் தேவராஜ் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். ஒரு சாமானிய மனிதனின் துணிச்சலான போராட்டக் கதையாக உருவாகும் இப்படத்தை கே.வி.கதிர்வேலு இயக்குகிறார். ராக் புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார். மேலும் வேலா ராமமூர்த்தி, படவா கோபி, சாம்ஸ், சென்ராயன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். எளிய மனிதர்களின் உணர்வுகளைப் பேசும் கதைகளில் யோகி பாபுவின் நடிப்பு எப்போதுமே தனித்துவமாக இருக்கும் என்பதால், 'சிங்காரம்' படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் டீசர் வெளியீடு குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகவுள்ளன.
· Actor Kayal Devaraj