நினைவுகளின் காதலைப் பேசும் 'யுவர்ஸ் லவ்விங்லி': புதிய திரைப்படத்தின் தலைப்பு வெளியானது!

நினைவுகளின் காதலைப் பேசும் 'யுவர்ஸ் லவ்விங்லி': புதிய திரைப்படத்தின் தலைப்பு வெளியானது!

உண்மையான அன்பு மற்றும் பசுமையான நினைவுகளை மையமாகக் கொண்டு உருவாகும் புதிய காதல் திரைப்படத்திற்கு 'யுவர்ஸ் லவ்விங்லி' (Yours Lovingly) எனப் பெயரிடப்பட்டுள்ளது. சில கதைகள் ஒருபோதும் முடிவதில்லை, அவை மீண்டும் நினைவுகூரப்பட மட்டுமே காத்திருக்கின்றன என்ற அழகான வரிகளுடன் படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு போஸ்டர் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தில் ஆகாஷ் பிரேம்குமார் மற்றும் நடிகை ஸ்ரீதேவி முதன்மை வேடங்களில் நடிக்கின்றனர். சாம் தி கிரியேட்டர் இயக்கத்தில் சூரஜ் நல்லுசாமியின் ஒளிப்பதிவில் ஃபீல்-குட் ரொமான்டிக் டிராமாவாக இப்படம் தயாராகி வருகிறது. காதல் நினைவுகளின் ஆழத்தையும் இளமைக்கால உணர்வுகளையும் மென்மையாகப் பேசும் கதைக்களமாக இது அமைந்திருப்பதாகப் படக்குழு தெரிவித்துள்ளது. தமிழ் சினிமா ரசிகர்களை ஈர்க்கும் வகையில் உணர்வுபூர்வமான பின்னணியில் உருவாகி வரும் 'யுவர்ஸ் லவ்விங்லி' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் அடுத்தடுத்த முக்கிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்