இசை உலகில் 25 ஆண்டுகளை நிறைவு செய்த யுவன் சங்கர் ராஜா: கொண்டாடும் தமிழ் சினிமா!
தமிழ் திரையுலகின் இசை இளவரசன் என்று போற்றப்படும் யுவன் சங்கர் ராஜா, சினிமா உலகில் கால்பதித்து 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள சிறப்பான சாதனையை மூத்த மக்கள் தொடர்பாளர் டயமண்ட் பாபு தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்திப் பாராட்டியுள்ளார். 'யுவனிசம்' என்ற பெயரில் இளசுகளின் இதயங்களை ஆட்சி செய்து வரும் யுவனின் இசைப் பயணத்தை ஒட்டுமொத்த கோலிவுட் திரையுலகமும் ரசிகர்களும் இணையத்தில் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். 1997ஆம் ஆண்டு 'அரவிந்தன்' திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான யுவன், காதல், நட்பு, பிரிவு, சோகம் என அனைத்து உணர்வுகளுக்கும் தனது வசீகர குரலாலும் மெல்லிசையாலும் உயிரூட்டியவர். குறிப்பாக பின்னணி இசையில் மாயாஜாலம் நிகழ்த்தும் யுவனின் தனித்துவமான பாடல்கள் கடந்த இரண்டு தலைமுறைகளாக ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளன. துள்ளுவதோ இளமை, 7ஜி ரெயின்போ காலனி, பில்லா, மங்காத்தா என அவர் கொடுத்த இசை விருந்துகள் காலத்தால் அழியாதவை. தொடர்ந்து புதுமையான இசையை வழங்கி வரும் யுவன் சங்கர் ராஜா, இன்னும் பல ஆண்டுகள் வெற்றிகரமாக வலம் வர வேண்டும் என்று இசைப் பிரியர்களும் முன்னணி திரைப்பிரபலங்களும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
· Idiamondbabu